11 வயது குழந்தையை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினான் 66 வயதுக் கிழவன்
பதினொரு வயதுச் சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக 66 வயதுடைய திருமணம் முடித்த வயோதிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை 27 ஆம் திகதிவரை சிறையில் வைக்குமாறு ஹட்டன் உயர்நீதிமன்ற நீதியரசர் அமில ஆரியரத்னவினால்ஆணையிடப்பட்டுள்ளது.
நல்லதண்ணி பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர், நல்லதண்ணி லக்ஷபான தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்தச் சிறுமியின் வசித்துவந்த வீடு சந்தேக நபரின் வீட்டுக்கு அண்மையிலேயே அமைந்துள்ளது. குடும்பத்தின் மூத்த பிள்ளையும் இந்தச் சிறுமியாவாள். சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், தந்தைதோட்டத் தொழிலாளியென்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சந்தேக நபர் ஒருபக்க பக்கவாத நோயாளியென்றும் சிறுமி அவருக்கு உதவுவதற்காக வீட்டுக்குச் சென்றவேளை, பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் நல்லதண்ணிப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
(கேஎப்)
<
0 comments :
Post a Comment