பொதுபலசேனா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்றதன் காரணம் யாதோ?
பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர்களை நேற்று முன்தினம் அவசரமாக பாதுகாப்பு அமைச்சு அழைத்திருந்தது என தெரியவருகிறது. இங்கு பொது பல சேனா இயக்கத்திடமிருந்து அமைச்சின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பல்வேறு வினாக்களைத் தொடுத்துள்ளது.
இதன்போது பொது பல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானஸார தேரர் கருத்துத் தெரிவிக்கும் போது,
‘அரச புலனாய்வுப் பிரிவினர் எங்களது இயக்கம் பற்றி விசேட தேடல்களில், புலனாய்வுகளில் இருப்பதை கடந்த காலங்களில் நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். அதனால் எங்களுக்கு எங்களைப் பற்றிக் கூறியதைப் போலவே எங்களால் தெளிவுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் சொல்வதற்கு இயலுமாக இருந்தது. முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றியும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் நாங்கள் கருத்துரைத்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment