அசலாவுக்கு ரூபா பத்து இலட்சம் வழங்குகிறது அரசு
வைத்தியரொருவரின் கவனயீனக் குறைவின் காரணமாக இடது கை வெட்டி அகற்றப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட மாணவி அசலா பிரியதர்சனியின் கல்வி மேம்பாட்டுக்காக அரசாங்கம் ரூபா 10 இலட்சம் ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளதுடன், அவருக்கு தொழில் ஒன்றை வழங்குவதற்கும் தனியார் நிறுவனமொன்று முன்வந்துள்ளது.
ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் உயர்கல்வி அமைச்சினால் மாணவி அசலாவுக்கு இந்தப் பணம் பெற்றுக் வழங்கப்படவுள்ளதோடு, உயர் கல்வியை சிறப்பாக நிறைவு செய்வதற்கு வேண்டிய உதவிகள் இன்னும் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கா தெரிவித்தார்.
இதேநேரம் பயிற்சியொன்றின் பின்னர் சட்ட அதிகாரியாக அசலாவுக்கு தொழில் வழங்க எலயன்ஸ் காப்புறுதி நிறுவனம் முன்வந்துள்ளது. அந்தத் தொழிலை அசலா பெற்றுக் கொள்ளத் தயாராகவிருப்பதாக தெரியவருகிறது.
(கேஎப்)
3 comments :
In case if she victimized because of
lack of care, lack of attention,lack of medical knowledge by an doctor,there cannot be any excuse for the medical professional,either he or she should be severely punished.
The victim lost the precious part of her body,10 lakhs of money and a job just a peanut for that poor girl.
The real Sri Lankan professionals have already left the country because of the illiterate politicians and their useless government.
That's the fact,universities just do the convocations,back door influence,favouritism play a dominant role everywhere.
Post a Comment