Thursday, February 7, 2013

கண்பார்வை குறைபாட்டை நீக்க உதவும் மீன்கள்!

சீப்ரா மீன் எனப்படும் ஒரு வகை மீனின் உயிர் மரபணுக்கள் மனிதன் கண்ணில் உள்ள விழித்திரயில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் சக்தி படைத்தவை எனச் சமீபத்தேய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதாவது இந்த மீனில் இருந்து பெறப்படும் Stem cells எனப்படும் மரபணுக்கள் Retinas என அழைக்கப் படும் விழித்திரையில் பழுது படும் ஒளிக் கூம்புகளை (Cones) மறுபடி உற்பத்தி செய்வதன் மூலம் இழந்த பார்வைத் திறனை மீள வழங்கும் ஆற்றலுடையன எனக் கூறப்படுகின்றது.

நமது விழித்திரையில் காணப்படும் தண்டுகள் (Rods) மற்றும் ஒளிக் கூம்புகள் (Cones) என்பவையே படங்களைக் கிரகிக்கும் ஆற்றலுடைய Photoreceptors ஆகும். மனிதனின் கண்களில் Rods இரவில் பார்வைத் திறனையும், cones பகல் நேரத்தில் அனைத்து நிறங்களையும் உணரச் செய்யும் தன்மையையும் அளிக்கின்றன.

இது குறித்து அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான டெட் அல்லிசன் கூறுகையில் நமது விழித்திரையில் உள்ள ஒளிக் கூம்புகளை (Cones) மட்டுமே Zebra மீனின் மரபணுக்கள் திரும்ப வழங்கக் கூடியன என்றும் இதுவரை கிடைக்கபெற்ற மருந்துகள் யாவும் தண்டுகளை (Rods) மட்டுமே குணப்படுத்தும் தன்மையுடையன எனவும் தெரிவித்தார். இது தொடர்பான விபரங்கள் பொதுமக்கள் விஞ்ஞான நூலகத்துக்கான நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com