Tuesday, February 12, 2013

மீண்டும் புலிகள் மேலெழும் பருப்பு வேகாது! படித்த பாடம் போதாதோ?

நம் நாட்டிலும் சர்வதேசத்திலும் வாழ்கின்ற எல்ரீரீ ஆதாரவாளர்கள் மீண்டும் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனக்குறிப்பிடும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அதிலிருந்து நாட்டைக்காக்கும் நடவடிக்கைகள் எடுக்கும்போது,அரசு தாட்சண்யம் காட்டாது என்றும் குறிப்பிடுகிறார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் ‘தேசத்துடன் தொடர்புற்ற பிரச்சினைகளின்போது அரசியல் மற்றும் இராஜதந்திர சவால்கள்’ எனும் தலைப்பில் நடந்த கரத்தரங்கில் உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு கூறினார்.

பாரிய யுத்தத்தில் தோல்வியுற்றுப் பின்னடைந்துள்ள பயங்கரவாதி இயக்கத்தின் உறுப்பினர்கள் ஜனநாயக அரசியல் மூலம் நாசகார கருத்துக்களை முன்வைப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என பாதுகாப்புச் செயலாளர் தெளிவுறுத்துகிறார்.

ஜனநாயக தேசத்துக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படும்போது, பயங்கவாத சிந்தனையாளர்களின் மேலெழ முடியும் என்றும் கனடா, அமெரிக்க ஐக்கியக் குடியரசு, பிரித்தானியா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளுக்கு காலாகாலமாக இடம்பெயர்ந்து கொண்டுள்ள தமிழ் மக்கள் தற்போது அங்கு பிரசாவுரிமை பெற்றுக்கொண்டுள்ளபோதும் அவர்களிடையே பலர் எல்ரீரீ ஆதரவாளர்களாக இருந்து கொண்டு நாட்டுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். என்று குறிப்பிடும் கோத்தபாய ராஜபக்ஷ,

எல்ரீரீயினருக்கு எதிரான யுத்தத்தைப் பற்றி அவர்கள் இன்று பிற நாடுகளுக்கு போலி முலாம் பூசப்பட்ட படங்களைக் காண்பித்துவருகின்றனர். அதனால் கடந்த சில வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு உட்பட பல்வேறு இயக்கங்கள் இலங்கைக்கு எதிராக தலைதூக்கியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com