Wednesday, February 6, 2013

பக்கத்து வீட்டுக்காரனை இழுத்துக் கொண்டு கொழும்புக்கு ஓட முயற்சி செய்த யாழ்ப்பாணத்துக் குடும்பப் பெண்..! -பஸ்ஸில் பிடிபட்டார்

தனது பக்கத்து வீட்டில் குடியிருந்தவரின் மனைவியுடன் கொழும்பிற்கு செல்ல முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது சொந்த மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்று; மாலை சுமார் 6.30 மணியளவில் பண்ணையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இளங் கணவனும் மனைவியும் போல ஆண்ணொருவரும் பெண்ணொருவரும் கொழும்பு செல்வதற்கான பஸ்ஸில் ஏறி நடத்துனரிடம் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு இருக்கைகளில்; அமர்ந்திருந்துள்ளனர்.

சற்று நேரத்தில் சத்தமிட்டுக்கொண்டு பஸ்ஸின் உள்ளே தனது பெண் பிள்ளையுடன் வந்த இளம் பெண்ணொருவர் உரத்துக் கூச்சலிட்டுள்ளார்..
இதன் பின்னர் தான் இவரும் தனித்தனியாக திருமணம் செய்துள்ளனர் என்றும் இவரும் தனித்தனியாக பக்கத்து வீட்டில் குடியிருக்கின்றனர் என்று தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கலாச்சாரம் சீர் கெட்டுள்ளதாக பலரும் பேசும் நிலையில் இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர்கள் எவரும் தயாராக இல்லையென்பதே உண்மை.

1 comments :

Anonymous ,  February 7, 2013 at 3:43 AM  

யாழ்பாணத்தான் முன்னேறிட்டாண்டா..............

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com