Monday, February 25, 2013

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் இன்று

இந்திய - இலங்கை அநுசரணையில் நடைபெறும் வரலாற்று புகழ்மிக்க கச்சதீவு திருவிழாவில் இரு நாடுகளையும் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையிலிருந்து 6 ஆயிரம் பக்தர்களும், இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளினதும் அருட்தந்தையர்கள் கூட்டாக இணைந்து, திருவிழா திருப்பலியை நிறைவேற்றவுள்ளனர். யுத்தம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த ஆண்டு கச்சதீவு திருவிழா வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இலங்கை கடற்படையினர் இதற்கு பூரண பங்களிப்பை வழங்கியிருப்பதுடன் யாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளும், அரசினால் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை-இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கச்சதீவில் பேச்சுவார்த்தை நடாத்தி, நிலைமை சுமுகமாக தீர்க்கப்பட்டது.

இம்முறையும், இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையில் கச்சதீவில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கச்சதீவில் நேற்றிரவு நவநாள் வழிபாடுகள் இடம்பெற்றன. இரு நாட்களுக்கு முன்னரே, இலங்கை இந்திய பக்தர்கள் கச்சதீவுக்கு வருகை தர ஆரம்பித்தனர். கச்சதீவில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும், பாதுகாப்பு செயலாளரின் மேற்பார்வையுடன், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com