Wednesday, February 27, 2013

யாழ்.பல்கலைக் கழக பட்டமளிப்பு நிகழ்வினை யாழ்.ஊடகங்கள் புறக்கணிக்கவுள்ளன

ஊடகவளங்கள், பயிற்சி நிலையத்தின் நிர்வாகச் சீர்கேடுகளா? காரணம்

யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் யாழ்.ஊடகவியலாளர்களை பழிவாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தும், யாழ்.ஊடகங்கள் மீது யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வை யாழ்.ஊடகங்கள் புறக்கணிக்கவுள்ளன.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா நாளை காலை நடைபெறவுள்ளது. இதில் யாழ்.ஊடகவியலாளர்கள் புகைப்படங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ்.ஊடகவியலாளர்கள் பட்டமளிப்பு நிகழ்வுகளை முற்றாக புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். குறிப்பாக யாழ்.ஊடகங்கள் மீதான அழுத்தங்களுக்கு யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் நிர்வாகமே காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.

நிர்வாகச் சீர் கேட்டுடன் இயங்கும் யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகளுக்கு யாழ்.ஊடகங்களில் ஒரு பத்திரிக்கை தவிர ஏனைய எவையும் போதிய ஒத்துழைப்புக்களை வழங்குவதில்லை.

இதனால் ஊடகவளங்கள் பயிற்சி நிலையம் யாழ்.ஊடகங்கள் மீது திட்டமிட்ட வகையில் இப்பழிவாங்கலை மேற்கொள்கின்றதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் தே.தேவானந்தால் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் சர்வதிகாரப் போக்கினால் யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் ஊடகவளங்கள் மாணவர்கள் மட்டும் புகைப்படம் பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒழுங்கான பயிற்சிகளையும் அனுபவங்களைப் பெற்றிராத இவர்கள் எடுக்கும் புகைப்படங்களையே பிரசுரிக்க வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளது.

இதனால் கடுப்பான யாழ்.ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வினை புறக்கணிக்கவுள்ளனர். இதேவேளை யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு நிதிவழங்கும் போயோ என்ற நிர்வாகத்தினர் இலங்கைக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபடும் நபர்களுக்கும் நிதிவழங்குவதாகவும் உறுதிப்படுத்த முடியாத சில தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com