Saturday, February 9, 2013

கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் வரவேற்கப்பட்ட புலம்பெயர் தமிழர். (படங்கள் உள்ளே)

புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து சென்றிருந்த தமிழர்கள் சிலருக்கு கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவத் தளபதியின் அழைப்பை ஏற்று பிரித்தானியாää கனடாää ஜேர்மனிää அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் வசிக்கின்ற சுமார் 23 பேர் கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் படையதிகாரிகளைச் சந்தித்து சுமூகமாக பேசியுள்ளனர்.

இச்சந்திப்பின்போது யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள்ää இன நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்புக்கள்ää வேலைவாய்பினை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்ää சிறு கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு வழங்கப்படுகின்ற ஊக்குவிப்புக்கள் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் என விரிவாக கிளிநொச்சி இராணுவத் தளபதியினால் விளக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் புலம்பெயர்ந்தோர் தமது எதிர்பார்ப்புக்கள் மற்றும் அதிருப்திகள் என்பவற்றையும் முன்வைக்க தவறவில்லை எனவும் தெரியவருகின்றது.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com