Saturday, February 9, 2013

மிகப் பிரபலமான அரசியல்வாதி ஹிலாரி: கணக்கெடுப்பில் தகவல்!!

சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் மிக பிரபலமான அரசியல்வாதியாக அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் அமெரிக்க அதிபரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் 2016-ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராகலாம் என்று 60 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியாக பணியாற்றினார். அமெரிக்காவின் வெளியுறவு செயலராக இருந்த ஹிலாரி கிளிண்டன், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பிப்ரவரி 1-ம்தேதி பதவி விலகினார்.

பதவி விலகி ஒரு வாரத்தில் இந்த கணக்கெடுப்பு வெளியாகி உள்ளது. மறுபடியும் அரசியலுக்கு வருவது குறித்து அவர் தனது முடிவை தெரிவிக்கவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com