இலங்கைக்கு எதிராக மீண்டும் ஜ.நா வில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம்- இந்தியப் பிரதமர்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்தனர். இதன்போதே பிரதம உறுதியளித்ததாக சுதன்சன நாச்சியப்பன் இதனைத் தெரிவித்துள்ளார்;.
ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டார்.
'அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில், சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம்' என்று பிரதமர் உறுதி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment