‘வெற்றிலைக்கு வாக்களித்தோர் பெருமையோடு’ என்கிறார் நிமல்
‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் சகலரும் இப்போது மிகவும் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். கட்சித் தலைவருக்கு விசுவாசமாக வேலை செய்கிறார்கள். ஒற்றுமையுடன் வேலை செய்கிறார்கள்’ - இவ்வாறு பெருந்தெருக்கள் மற்றும் நீர்வள முகாமைத்துவஅமைச்சர் நிமல் சிறிபால த சில்வா குறிப்பிட்டார்.
பதுளையில் நடைபெற்ற விழாவொன்றின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
‘ஒரு கட்சிக்கு இருக்க வேண்டியது ஒரு தலைவரே! நூற்றுக் கணக்கான தலைவர் தேவையில்லை. அந்தத் தலைவருக்கு பக்க பலமாக நாங்கள் இருக்க வேண்டும். என்றாலும் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒருமைப்பாடு கிடையாது. தெளிவான குறிக்கோளும் கிடையாது. எனவே அந்தக் கட்சி பற்றிப் பேசி காலத்தை விரயமாக்குவதில் எந்தப் பயனும் கிடையாது.
ரணிலும் சஜித்தும் சண்டை பிடித்துக் கொள்கிறார்கள். ரங்க பண்டார அவர்கள் இருவரையும் ஆட்டி வைக்கிறார். தயாசிறி ஜயசேக்கர மேடைகளுக்கு வந்து ஐயோ எனக்கு நடந்த கதி இதுவே என்று அழுது புலம்புகிறார். இப்படியான கட்சிகளுக்கு பொதுமக்கள் செல்வார்களா? அதனால் அந்தக் கட்சியிலுள்ளவர்கள் இந்தக் கட்சிக்கு வருகிறார்கள். அவர்களை நாங்கள் மிகவும் அன்பாக அரவணைத்து அவர்களுக்கு உதவுகிறோம்’ என்றும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.
(கேஎப்)

0 comments :
Post a Comment