Sunday, February 10, 2013

தேர்தல் ஆணையாளரைச் சீண்டிப் பார்க்கிறார் பொன்சேக்கா

தனது கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றபோதும், தேர்தல்கள் ஆணையாளர் அரசுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதால் மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை தனது கட்சி பதிவுசெய்யப்படவில்லை என ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.

தற்போதைக்கு 68 அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளபோதும் அவற்றில ஏறத்தாள 50 கட்சிகள் செயற்படாமல் இருக்கின்றன எனக் குறிப்பிடும் பொன்சேக்கா, தங்களது கட்சியை தேர்தல்கள் ஆணையாளர் பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதற்குக் காரணம் அரசாங்கத்தின்மேல் அவருக்குள்ள பயமும், இலங்கையில் ஜனநாயகம் பாதுகாக்கப்படாமலிருப்பதனாலுமாகும் என்று தெளிவுறுத்துகிறார்.

பிரச்சினைகள் எப்படி வந்தாலும் புதிதாக எந்த மிரட்டல்கள் வந்தாலும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களை முன்னிறுத்தி வெற்றியடைந்து, அரசாங்கத்திற்கு எதிரான பலம்மிக்க சக்தியாக மாறுவதே தனது குறிக்கோள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com