பிரதித் தலைவர்களோ நால்வர், அறையோ ஒன்று!
எதிர்வரும் 14 ஆம் திகதி ஐதேகவின் பிரதித் தலைவர்களாக பதவியேற்கவுள்ள நால்வருக்கும் ஒரு உத்தியோகபூர்வ அறையே வழங்கப்படவுள்ளது என சிரிகொத்தவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.
ஐதேகவின் உயர்பீடம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன்னர் பிரதித் தலைவர்களாக இருந்த இருவருக்கும் வெவ்வேறு அறைகள் வழங்கப்பட்டிருந்த்தோடு அந்த அறைகள் தலைவரின் அறைக்கு அருகிலேயே அமைந்திருந்தன.
புதிய பிரதித் தலைவர்களாகவுள்ள சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரிஎல்ல, கபீர் ஹாஷிம், ரவி கருணாநாயக்கா ஆகியோருக்கு சிரிக்கொத்தவிலுள்ள கட்சியின் தலைமைப்பீடத்திலுள்ள கீழ்மாடியிலுள்ள ஓர் அறையை வழங்கப்படவுள்ளதாகவும், அதனை அவர்கள் தங்களுக்கு உசிதமான முறையில் உத்தியோகபூர்வ அறையாக அமைத்துக்கொள்ள முடியும் என கட்சியின் முக்கிய பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment