Thursday, February 28, 2013

மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது தாக்குததல் - தமிழகத் தலைவர்கள் மூவரைக் கைது செய்ய முயற்சி !

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் தூரகம் மீது தாக்குதுல் மேற்கொண்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பு தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மலேசியப் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி அறிவித்த போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து போகவில்லை.
இதன்போது தமிழகத் தலைவர்கள் மூவரை கைது செய்து அழைத்து செல்ல பொலிசார் முயற்சித்தனர்.

இதனால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கைத் உயர் ஸ்தானிகராலயம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.

இத் தாக்குதலில் தூதரகத்தின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டது. இதனையடுத்து பொலிசார் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டம் தமிழர் உதவும் கரங்கள், மலேசிய தமிழர் முன்னேற்ற இயக்கம் ஆகிய அமைப்புகளால்; முன்னெடுக்கப்பட்டது.

1 comments :

Anonymous ,  March 1, 2013 at 1:31 AM  

thamilakaththanukku enkea mandai irukku?? purampokkiyal.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com