புலம்பெயர் புலிகளுக்கு இடையில் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது
ஜெனீவாவில் தீக்குளித்து சாவைத் தழுவிய முருகதாசனின் இறுதிநிகழ்விற்கான முழுச்செலவையும், விதைநிலத்திற்கான காணிக்கான செலவையும் பொறுப்பேற்று நடத்திய புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த தேசிய செயற்பாட்டாளர்களால் நிறுவப்பட்ட கல்லறை மற்றும் அங்கு பறக்கவிடப்பட்டிருந்த கொடியும் பிடுங்கி வீசப்பட்டுள்ளதுடன் அந்த இடத்தில் புதிய தொரு குழுவினரால் ‘சிறீலங்கன் தமிழர்களுக்காக’ மடிந்தார் என்ற வாசகம் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்லறை புதிதாக நிறுவப்பட்டுள்ளது.
அத்தோடு, தன்னுணர்வவோடு ஜெனீவாவில் தீக்குளித்துசாவைத் தழுவிய முருகதாசனின் கல்லறை மீது புலிகளின் இலட்சினையைப் பொறித்ததன் மூலம் அவரை புலிகளின் தற்கொடைப் போராளியாக சித்தரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment