‘எங்கள் பால்மாவில் நஞ்சு இல்லை’ என்கிறது பெண்டேரா
இலங்கை பெண்டேரா பிரேண்ட்ஸ் நிறுவனம், தமது உற்பத்திகள் மிகவும் பாதுகாப்புமிக்க சுகாதார முறையிலேயே உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.
பெண்டேரா நிறுவனத்தின் உற்பத்திகளில் நச்சுத் தன்மையுள்ளன என லங்கா சீ நிவ்ஸ் இணையத்தளம் நேற்றுமுன் தினம் செய்தி வெளியிட்டிருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அந்நிறுவனம் அதில் உண்மை இல்லை என அறிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைபெண்டேரா பிரேண்ட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் லியோன் கிளேமண்ட், தங்களது நிறுவனத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களும் உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது என்று குறிப்பிட்டுள்ளார். பெண்டேரா நிறுவனத்தின் அனைத்து பால்மாப் பொருட்களும் நுகர்வோரின் உடல்நலத்திற்குப் பாதுகாப்பானது.
டீ.ஸீ.டீ. (D.C.D.) பொருளானது எந்தவொரு முறையிலும் உணவுப்பொருட்களில் பாதிப்பை ஏற்படுத்தாது. பெண்டேரா நிறுவனம் தமது உற்பத்திப் பொருட்களில் கூடுதலான கரிசனை காட்டுவதால் அவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் மேலெழுந்தால் தாம் அந்த விடயத்தில் முதல்நிலையில் நின்று ஆராயும்.
சிற்சில பால்மாப் பொருட்களில் டீ.ஸீ.டீ. (D.C.D.) மிகவும் சொற்ப அளவில் அடங்கியுள்ளதாக அறியப்பட்டாலும், அந்த அளவானது ஐரோப்பிய ஆணைக்குழுவில் (European Commission) சுகாதாரத்திற்கு ஏற்புடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சொற்ப அளவானது உணவுப் பொருட்கள் பாதுகாப்பதற்காகவே அன்றி உடல் நலத்திற்குகேடு விளைவிக்காது என்று நிவுஸிலாந்தின் முதன்மை தொழில் அமைச்சு (New zealand Ministry of Primary Industry) உறுதிப்படுத்தியுள்ளது.
உலகின் மிக உயர்ரக உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது பெண்டேரா நிறுவனமே. சுகாதாரத்தில் கண்ணும் கருத்துமாயிருப்பது எங்கள் அடிப்படைத் தேவையாகும்.
‘சுருக்கமாகச் சொன்னால், எங்கள் உற்பத்திகள் ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதும் பாதுகாப்பானதுமாகும். நுகர்வோர் எவ்விதச் சந்தேகமும் இன்றி எமது உற்பத்திகளை கொள்வனவு செய்யமுடியும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறோம்’
(கேஎப்)

1 comments :
then why you dont take legal Action against லங்கா சீ நிவ்ஸ்
Post a Comment