Saturday, February 16, 2013

காயமடைந்தவர்கள் 400 இல் இருந்து 1100 ஆக அதிகரிப்பு- மேலும் அதிகரிக்கலாம் ?

ரஷ்யாவின் தென்பகுதியில் எரிநட்சத்திர விழுந்து வெடித்ததினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 400 இல் இருந்து 1100 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீற்றர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்திலேயே இந்த எரிநட்சத்திரம் வெடித்துச் சிதறியுள்ளது.

விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளதன் பிரகாரம் 10 தொன் நிறையில் இரண்டு மீற்றர் நீளமான எரிநட்சத்திரமே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.
மணித்தியாலயத்திற்கு 54 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் வாயுகோளத்திற்குள் புகுந்த எரிநட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட தூரத்தில் வெடித்து சிதறியுள்ளது.

அதன் பின்னர் அது எரிமழையாக பொழிந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதன் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 400 இல் இருந்து 1100 வரை தற்போது உயர்ந்துள்ளது. இவ்வெண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com