Monday, February 25, 2013

ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் சற்று முன்னர் ஆரம்பம், இலங்கைக்கு ஆப்பு 20 ஆம் திகதி.!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர் சற்று முன்னர் சுவிட்ஸர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.ஐக்கியநாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையில் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை இக் கூட்டத் தொடர் இடம்பெறும்.

அத்துடன் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை மார்ச் மாதம் 20 ஆம் திகதி மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் இலங்கையின் சார்பில் ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதியின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளனர்.

2 comments :

karan ,  February 25, 2013 at 6:55 PM  

இலங்கைக்கு ஆப்பா.. புலிகளுக்கு பருப்பா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாங்கள் உங்களுக்கு ஆதரவு தரமாட்டோம் என ஆப்படித்து விட்டது. இதுக்கு மேலும் ஆப்பா?

அமெரிக்கா பெரிய அறிக்கை ஒன்றை நூற்றுக்கணக்கான பக்கங்களில் சமர்ப்பிக்கும். அதன் கொப்பி இலங்கைக்கும் அனுப்பப்படும். அந்த கொப்பி கக்கூஸ் துறைப்பதற்று பயன்படுத்தப்படும்.

முமனப்பால் குடிப்பவர்கள் அடுத்த பிறப்பிலாவது முலைப்பால் குடிக்கட்டும்.

Anonymous ,  February 26, 2013 at 8:14 AM  

முற்பது வருட காலமாக தொடர்ந்த சண்டைகள், போராட்டங்கள், கொலைகள், அழிவுகள் ஒரு முடிவுக்கு வந்தாலும், எமது நாட்டு அடிப்படை இனப் பிரச்சனைகளுக்கு ஒரு நிதந்தர தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. இதை உலகம் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பதை அறிந்திருந்தாலும், இலங்கை அரசாங்கம் உலகை இலகுவாக ஏமாற்றி விடலாம் என்ற நினைப்பில் இதுவரை காலமும் அலட்சியமாக இருந்துள்ளது. இப்போ நன்றாக மாட்டிக்கொண்டுள்ளது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com