உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல்!
உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இன்று வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் அல்வாய் அத்தாய் சந்தியில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டதுடன் விநியோகப்பதற்காக அவர் எடுத்துச்சென்ற பத்திரிகை மற்றும் மோட்டார் சைக்கிளுக்கும் தீ மூட்டி நாசப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நாகேஸ் பிரதீபன் (வயது 32) என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளா பத்திரிகை விநியோகஸ்தர் என்று தெரிவித்த நெல்லியடி பொலிஸார் இவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவருவதாக குறிப்பிட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment