Wednesday, January 2, 2013

அதிகரிக்கிறது கட்டணம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால், எரிவாயு மற்றும் மின்கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள எரிவாயுக் கம்பனிகளின் வேண்டு கோள்நுகர்வோர் அதிகார சபையால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வாரம் பல அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 2 வகை உலை எண்ணெயின் விலையை உயர்த்திவிட்டது.
இலங்கை மின்சாரசபை மற்றும் வேறு அனல் வெப்ப மின்னுற்பத்தி நிலையங்களுக்கு மானிய விலையில் எரிபொருளை வழங்குவதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாத மொன்றுக்கு 4,194 மில்லியன் ரூபா நட்டமடைவதாக பெற்றோ லியக் கைத்தொழில் அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.பி.எம்.ஜி. றொஷhன் கூறினார். 129 ரூபாவு க்கு விற்கவேண்டிய எண்ணெயை 115 ரூபாவுக்கு விற்பதால் ஒரு லீற்றரில் 14 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை விளக்கி இலங்கை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சகல விபரங்களையும் அனுப்பியுள்ளதென இலங்கை மின்சாரசபையின் பொதுமுகாமையாளர் நிஹால் விக்கிரமசூரிய கூறினார்.

உலை எண்ணெயின் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கங்களை ஆராய்வதற்காக இன்று நடைபெறவுள்ள கூட்டத்திற்கு மின்சக்தி, வலு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமை தாங்குவார். இதன் பின் உலை எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக அறிக்கையொன்றை பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைப்போமெனவு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com