நீதியரசர் சிரானி அரசியல் ஆட்டத்தில்..... – விமல் வீரவன்ச
(கலைமகன் பைரூஸ்) ‘இன்று மேல் நீதிமன்ற நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க அரசியலில் ஓர் உருவமாக பெரும்பாலானோருக்குக் காட்சிதருவதாகவும், சரத் பொன்சேகா சிரானி பண்டாரநாயக்காவை தன்னுடன் அரசியலில் சேர்ந்துகொள்ள அழைப்பு விடுப்பது அவர், அரசியலுக்குத்தான் பொருத்தம் என்பதனாலுமாகும்’ இவ்வாறு அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டார்.
மாலம்பை மாதிரி ஆண்கள் வித்தியாலயத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ‘சிசு சவிய’ திட்டத்தின்கீழ் கடுவெலத் தொகுதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் உள்ளடங்கும் விதமாகத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் 250 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக்க் கலந்து கொண்டு உரையாற்றும்போது அமைச்சர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.
அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டதாவது,
‘இன்று மேல்நீதிமன்ற நீதியரசரிடத்தில் நீதியரசர் என்ற நடத்தை இல்லை. மாறாக அரசியல் நடத்தையே அவரிடம் காணப்படுகிறது. அவர், எதிர்வரும் மார்ச் மாத்த்தில் ஜெனீவாவில் முன்னெடுக்கப்படவுள்ள சர்வதேச பயங்கரவாதக் குற்றங்களுக்கு பதிலளிக்கவே தயாராக இருக்கின்றார். இலங்கை நீதிமன்றத்தில் பிறரது விரல்கள் நீளுகின்றன, அதில் சுதந்திரம் இல்லை, நீதிமன்றத்திற்கு இடையூறுகள் உள்ளது போன்ற குற்றச்சாட்டுக்களையே அவர் முன்வைக்கவுள்ளார். அதனால் சர்வதேச ரீதியில் விசாரணை நடாத்துவதே உசிதம் என்பதே அவரது கருத்து.
புலிப் பயங்கரவாதிகளை அழித்து இந்நாட்டுக்கு சாந்தி, சமாதனம் பெற்றுக்கொடுத்த இராணுவத்தினரை பலிக்கடாக்களாக மாற்றக்கூடிய எதிர்காலப் பிரேரணை நியாயமானதுதான் என்று கூற உயர்நீதிமன்ற நீதியரசர் காரியங்களை முன்னெடுத்து வருகின்றார்.
இலங்கையில் நீதிச்சேவை சரிவர இயங்குவதில்லை. நீதிமன்றத்தில் சுதந்திரம் இல்லை. அரசாங்கத்தால் நீதிமன்றத்திற்குத் தலையீடுகள் வருகின்றன போன்ற கருத்துக்களை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளில் வலுப்படுத்தவே அவர் தன்னாலான பங்களிப்பைச் செய்கிறார்.
மார்ச் மாத்த்தில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டிற்குக் கொண்டுவரவுள்ள கருத்துக்களின் பின்னணிக்கு இவை உதவும் என அவை எதிர்பார்க்கப்படுகின்றன.
‘இலங்கையில் நீதிக் கட்டமைப்பு உடைந்து சிதறியுள்ளது. நீதிமன்றத்திற்கு கையோங்கள் எழுகின்றன. நீதிமன்றத்திற்குச் சுதந்திரம் இல்லை. அதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் இராணுவக் குற்றச் செயல்கள் பற்றி ஆராய்வதற்கு இலங்கைக்கு முடியாது. அதனால் சர்வதேச விசாரணைக் குழுவொன்றை நியமித்து இராணுவக் குற்றச் செயல்கள் பற்றி ஆராய வேண்டும் என்ற கருத்துக்கு உசாத்துணையான காரணங்களைச் செய்வதில் இன்று மேல்நீதிமன்ற நீதிபதி செயற்பட்டுவருகின்றார்.
உண்மையில் சொல்லப் போனால், மேல்நீதிமன்ற நீதியரசருக்கு எதிராக்க் குற்றச் சாட்டு அவசியமில்லை. அவரது கணவன் சம்பந்தப்பட்ட வழக்கு அவர் தலைமை வகிக்கும் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டதும் அந்நேரம் தான் பதவியில் இருக்கிறேனா என்று சிந்தித்திருக்க வேண்டும். இலவசக் கல்வியைச் சீராக்க் கற்று பட்டம் பெற்றிருந்தால், அதன் சிறப்பைத் தெரிந்திருந்த பெண்மணியென்றால் அவர், அந்தப் பதவியில் தொடர்ந்தும் இருந்திருக்க்க் கூடாது.
நீதிபதி சிரானி திலகவர்தனவின் தலைமையில் நீதிபதிகள் கொண்ட மேல்நீதிமன்றத்தில் 900 வைப்பாளர்களுடன் கூடிய செலின்கோ நிறுவனத்தின் வழக்கிலிருந்து நீதிபதிகள் தாமாக விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தவர் சிரானி பண்டாரநாயக்கா. அதன்பிறகே அவர் இன்னும் மூன்று நீதிபதிகளுடன் இணைந்து வழக்கை விசாரிக்கத் துவங்கினார்.
அந்நேரத்தில்தான் தனது மகளின் பேரில் கழிவுடன் சேர்த்து ரூபா 16 இலட்சம் பெறுமதியான வீடொன்றை வாங்கினார். செலிங்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான எந்தவொன்றையும் நீதிமன்ற அனுமதியின்றி விற்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலைமையில் அவர், தனது மகளின் பேரில் வீடு வாங்கி இருக்கிறார்.
அதேமாதிரியான இன்னொரு தீர்ப்பும் இந்த வழக்கில் இருந்தது. அந்த நிறுவனத்தை நடாத்திச் செல்வதற்கு அன்றாடம் தேவையான செலவினங்கள் போக, அதற்குச் சொந்தமான எந்தவொரி உடைமையை விற்பதாக இருந்தாலும் அது கூடுதல் விலைக்கே விற்கப்படவேண்டும் என்ற தீர்ப்பு இருக்கும்போதே ஜானக்க ரத்நாயக்காவின் பொறுப்பில் இயங்கும் செலின்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான வீட்டுத் திட்டத்தின் கீழ் 16 இலட்சம் ரூபா பெறுமதியான தொகை வீடு எவ்வாறு பெறப்பட்டது? அந்த வீட்டுக்காக அதிகூடிய தொகை பெறப்பட்டதா? அந்த வீட்டை விற்பதற்கு நீதிமன்றத்திலிருந்து அனுமதிபெறப்பட்டதா? அவ்வாறு விற்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தால் அந்த அனுமதியை அளித்தவரும் மேல்நீதிமன்ற நீதிபதியல்லவா? தான் தீர்ப்பளிக்க வேண்டிய குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிறுவனத்திலிருந்து முன்னர் பதவிவகித்த நீதிபதிகள் அந்த உடைமைகளை விற்க முடியாது, விற்பதாயின் பல்வேறு அனுமதிகளையும் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுள்ள ஆணைகளைக் கருத்தில் கொள்ளாது அந்தக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிறுவனத்திடமிருந்து தான் உடைமையொன்றை தனது மகளின்பேரில் எடுத்திருக்கிறார். இதனை என்னவென்று சொல்வது? நீதிமன்றத்தின் சுதந்திரம் என்று கூறுவது அதனைத்தானா?
இந்தசெலின்கோ முதலீட்டு நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்கள் எங்கள் அப்பாவிப் பொதுமக்கள். அவர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள இந்த அநியாயம் பற்றிய ஏக்கத்திலேயே இருந்தனர். அந்த 900 வைப்பாளர்களுக்கும் நீதிவழங்கப்பட வேண்டியிருந்த வழக்கு இது.
ஆயினும், மேல்நீதிமன்ற நீதிபதி சிரானி பண்டாரநாயக்க இந்த வழக்கிற்குத் தலைமை தாங்கியதும் இந்த வழக்கு உரிமையாளர்கள் பக்கம் சாயத்துவங்கியது. அந்த சாய்தலின் வெற்றியோ என்னவோ தெரியாது மகளின் பேரில் வீடும் ஆனது.
இதுதானா நீதிமன்றத்தின் சுதந்திர நிலை என்பது? மேல்நீதிமன்ற நீதிபதி இவ்வளவு தூரத்திற்கு நீதிமன்றத்தின் பரிசுத்தத் தன்மைக்கு இழுக்குச் சேர்த்துவிட்டு மேலும் இந்தப் பதவியில் இருக்க, அவர் அவரது வழக்கிற்குத் தீர்ப்பு வழங்க போகப் போகிறார்....’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment