Monday, January 7, 2013

அரசியலமைப்பு ரீதியிலான செயற்பாடுகளை சர்வதேச சமூகம் விமர்சிக்க முடியாது. மஹிந்தர்

சர்வமத தலைவர்களுடனான சந்திப்பின்போது இலங்கையின் அரசியலமைப்பு ரீதியான செயற்பாடுகளை சர்வதேச சமூகம் விமர்சிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சங்கைக்குரிய பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர், கொழும்பு அதிமேற்றாணியார் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை உட்பட சர்வமத தலைவர்கள், நேற்று ஜனாதிபதியை சந்தித்து, குற்றவியல் பிரேரணை தொடர்பாக எடுத்துக்கூறினர். இதனை காரணமாக வைத்து வெளிநாடுகள் இலங்கையில் வீண் தலையீடுகளை மேற்கொள்ளலாமென, சர்வமத தலைவர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி குற்றவியல் பிரேரணை அரசியலமைப்புக்கு உட்பட்ட விதத்தில், முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விமர்சிப்பதற்கு சர்வதேச சமூகத்திற்கு எவ்விதத்திலும் அனுமதி இல்லையென்றும், அவர் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  January 7, 2013 at 3:09 PM  

Hon President has the right to say.Every country has it's right to bring country's every crisis independely to a reasonable and acceptable solution.It is difficult to say that any country around the world has orderly and peaceful and sound atmosphere.We cannot remain just like a mirror.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com