தெரிவுக்குழுவின் அறிக்கையை உடன் இரத்துச் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு-முற்றுகிறது முறுகல்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையையும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை உடனடியாக இரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.தமக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின் பின்னர் வெளியிட்ட அறிக்கை செல்லுபடியற்றது என்று தீர்ப்பளிக்க வேண்டும் என கோரி பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் விசாரணையின் பின்னர் அவர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற நிலையில் கட்டளையின் கீழ் செயற்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சட்டவலுவற்றது என்று உயர்நீதிமன்றம் தமது சட்டவிளக்கத்தை, மேன்முறையீடடு நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே இன்று அந்த அறிக்கையை ரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கையின் நீதித்துறைக்கும், அரசாங்கத்திற்குமான முறுகல் உச்சக்கட்டத்தை விரைவில் அடையும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment