இலங்கைப் பணிப்பெண் ரிசானா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து -தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
"மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்ப வேண்டாம்"
சவூதி அரேபியாவில் மூதூர் பணிப் பெண் ரிசானா நபீக் கொலை செய்யப்பட்டமை மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்ப வேண்டாம் எனக் கோரியும் தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதன்போது கொழும்பு நகர மண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான பிக்குகள் ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் பேரணியாக சென்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் சவூதி அரேபியாவினால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை கண்டிக்கிறோம், இனிமேலும் இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, சவூதிக்கு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக தேசிய பிக்குகள் முன்னணியினரின் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை ஜனாபதி மகிந்தவிற்கு கையளிக்கப்பட்டது
.
1 comments :
We learn the true facts of the Buddha Dharma.God has given the great Buddhist monks the courage strength and the holy humility to explain it to the entire world "the worthiness of every living being".
Post a Comment