Thursday, January 24, 2013

பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கோமணமும் பறிபோகும் நிலையில் சஜித் பிறேமதாஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாஸவின் புதல்வன் சஜித் பிறேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினை கைப்பற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இவரின் இம்முயற்சிகளின் ஊடாக சிதைந்போயிருந்த எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மேலும் சிதைவுற்ற நிலையில் தற்போது அவர் வகிக்கும் கட்சியின் பிரதி தலைவர் பதவியும் பறிபோகும் அறிகுறிகள் தென்படுகின்றன.

கடந்த செயற்குழு கூட்டத்தில் பிரதி தலைவர் பதவிக்கு மீண்டும் தெரிவு செய்யப்படாத சஜித் பிரேமதாசவிற்கு பிரதி தலைவர் பதவியை மீண்டும் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியை வகித்து தலைமைத்துவத்திற்கு வர கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எhதிராக சூழ்ச்சி செய்த சஜித் பிரேமதாச தான் வகித்த பதவிகளையும் இழைந்துள்ளார்.

கடந்த செயற்குழு கூட்டத்தில் புதிய பதவிகள் வழங்கபபட்ட போதிலும் பிரதி தலைவர் பதவி வழங்கப்படவில்லை. கடசி தலைவர் ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பான தனது முடிவை பின்னர் வழங்க தீர்மானித்ததை தொடர்ந்து பிரதி தலைவராகவிருந்த சஜித் பிரேமதாசவிற்கு பதவியும் செயற்குழு அங்கத்துவமும் இல்லாமல் போய்விட்டது.

தான் கட்சி தலைவராக போவதாக கூறி சஜித், கரு அணியை உருவாக்கி கட்சியின் சிலருடன் தலைமைத்துவத்தை பறித்தெடுக்கும் போராட்டத்தை பிரேமதாச முன்னெடுத்தார். எனினும் கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பத்தை பெற்றுக் கொள்ள சஜித் பிரேமதாச தவறியமையினால் தன்னுடன் அவ்வணியில் இணைந்து கொண்ட ஏனைய உறுப்பினர்களை தாரைவார்த்தமையினால் இறுதியில் சஜித் பிரேமதாசவிற்கு எவரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

கட்சி தலைமையகமான சிறிகொத்த வட்டாரங்களின் தகவல்களின் படி சஜித் பிரேமதாச பிரதி தலைவர் பதவியை வகித்து கட்சி தலைமையகத்திற்கு நடத்தி சென்ற அவரது அலுவலகத்திலிருந்து பிரேமதாச வெளியேற்றபபட்டுள்ளார்.

தற்போது வெற்றிடமாகவுள்ள பிரதி தலைவர் பதவி வெகு விரைவில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவிக்கப்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதே நேரம் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு மிக நெருக்கமாக காணப்படும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சி அந்தரங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com