Sunday, January 27, 2013

இலங்கை -இந்தியா உறவுக்கு எத்தனை வருடம் என மகாலிங்கத்திற்கு சொன்ன வடமாகாண ஆளுநர்

இந்தியாவின் 63 குடியரசுதின நிறைவு தின நிகழ்வு நேற்று(26.01.2013) மாலை 7.30 மணிக்கு காங்கேசன்துறை வீதியில் உள்ள செல்வா மண்டபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு பிரதம அதீதியாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இரவு விருந்தும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் கைலாசப்பிள்ளை மற்றும் திருமதி கைலாசப்பிள்ளை, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் நீதிபதிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இலங்கை மற்றும் இந்தியாவிற்கும் இடையில் 2,500 வருடங்களுக்கு மேலாக நட்புறவு நிலவுவதுடன், தற்போதும் இந்த இரு நாடுகளுக்கிடையிலான உறவை காட்டக்கூடியதாக கலை கலாச்சார நிகழ்வுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி இலங்கையின் கல்வி, பொருளாதாரம் என பல்வேறுபட்ட அபிவிருத்திக்கும் இந்திய அரசாங்கம் நிதி மற்றும் பொருளாதரா உதவிகள் வழங்கி வருகிறது, அதிலும் 30 வருடங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதியின் மீள்கட்டுமானம், கல்வி, விளையாட்டு என பல்வேறு திட்டங்களுக்கும் நிதி வழங்குவதுடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதாகவும், இதனை தமது அரசாங்கம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், யாழ் காங்கேசன்துறை துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி விமானப்படைத்தள அபிவிருத்தி மற்றும், புகையிரதப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com