சுங்கப்பிரிவிடம் மாட்டியது 13 கோடிரூபா பொருட்கள்
மத்தியகிழக்கு நாடுகளில் தொழில்புரிந்து நாடு திரும்பும் போர்வையில் சிலர் பயணப் பொதிகளில் மறைத்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பொருட்களை விமான நிலை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் 13 கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.
இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் வெளிநாட்டு சிகரெட், பாற்கட்டி, மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் போன்றன அடங்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment