Friday, December 21, 2012

தழிழரை தன்னிச்சையாக கைதுசெய்யலாம்! மனித உரிமை கண்காணிப்பகம்

எந்தவொரு தமிழரும் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படலாம் என்ற பயங்கர செய்தியை பல்கலைக்கழக மாணவர்களின் கைது தெரிவிக்கும் செய்தி என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிறட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கோ அல்லது நம்பகமான நடவடிக்கையை எடுப்பதற்கோ இலங்கையின் உயர்பீடம் தயாராக வேண்டுமென்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையென்றை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக கண்காணிப்பகம் வெளியிட்டு அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சண்முகம் சொலமன், கனகசுந்தரம் ஜெயமஜேந்த், பரமலிங்கம் தர்ஷானன் மற்றும் வி.பவனந்தன் ஆகிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து டிசெம்பர் 10ஆம் திகதியளவில் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெலிக்கந்தை முகாமில் 600 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமுகமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு வெகு விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ - யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட குழுவினரிடம் அறிவித்திருந்தார்.

'எந்தவித குற்றச்சாட்டுமின்றி நான்கு மாணவர்களை கைதுசெய்து அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதானது பயங்கரமான செய்தி யொன்றினை தெரிவிக்கிறது. எந்தவொரு தமிழரும் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படலாம் என்ற பயங்கர செய்தியே அதுவாகும்' என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிறட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

'இதுபோன்ற காரியங்கள் நியாயமான குறைகளாகவே அமையுமே தவிர சமரச முயற்சியாக அமையாது என்பதை இலங்கை அரசாங்கம் நன்கு உணர வேண்டும்' எனவும் பிறட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com