தெரிவுக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
பிரதம நீதியரசருக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா இவ் அறிக்கையினை இன்று சமர்பித்துள்ளார்.
இதேவேளை இந்த அறிக்கையை கூடிய விரைவில் சபைக்கு ஆற்றுப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க அந்த அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆயினும் விசாரணை அறிக்கையை ஜக்கிய தேசியக் கட்சி முற்றிலும் நிராகரித்துள்ளது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு 10 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சபாநாயகர் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் திகதி தீர்மானிக்கப்படும் என்றார்.
0 comments :
Post a Comment