யாழில் பயங்கரவாத்துடன் தொடர்புடைய 30 இற்கும் மேற்பட்டோர் கைது
பயங்கரவாதத்துடன் தொடர்புயவர்கள் என்று 30 இற்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாராலேயே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளின் கீழேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இக் கைதுகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment