Sunday, December 9, 2012

மீண்டும் டெஸ்ட் போட்டியை வென்றது இங்கிலாந்து!!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.இதன் மூலம் அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.கொல்கத்தாவில் நடந்து வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 316 ஓட்டங்களை எடுத்தது. இங்கிலநது 523 ஓட்டங்களை எடுத்தது. கேப்டன் அலெஸ்டைர் கூக் 190 ஓட்டங்களை எடுத்தார்.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி இன்று காலைவரை விளையாடிய போதும் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. நேற்றே போட்டி முடிந்திருக்க வேண்டியது என்றாலும், அஷ்வினின் நிதானமான துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கு சிறிது நெருக்கடி கொடுத்தது. அவர் இன்று காலை வரை ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சில் ஆண்டர் சன், ஃபன் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 41 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கேப்டன் அலெஸ்டீர் கூக், ட்ரோட், பீட்டர்சன் ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறினர். 3 விக்கெட்டுக்கள் இழந்திருந்த நிலையில் போட்டியை முடித்தது இங்கிலாந்து.

பந்துவீச்சில் அஷ்வின் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். நாங்கள் இன்னமும் அதிக ரன்கள் எடுத்திருந்தால் எமது பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்திருப்பார்கள். குறைந்தது 400, 450 ரன்களுக்கு மேலாவது எடுத்திருக்க வேண்டும். மண்சரிவு போன்று வீழ்ந்துவிட்டோம். எம்மால் அதை நிறுத்த முடியவில்லை. சிறந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

அவர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் பந்து வீசினார்கள். சிறப்பாக ஃபீல்டிங் செய்தார்கள். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் நாம் பழிவாங்க வேண்டிய நேரமிது. நாக்பூரில் எம்மால் முடிந்த அனைத்தையும் தரவேண்டிய நேரமிது என்றார் இந்திய கேப்டன் தோனி.

நாக்பூரிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற போராடுவோம் என்றார் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டீர் கூக். அவரே போட்டி நாயகனாகவும் தெரிவானார். இதேவேளை இந்திய அணி தொடர்ந்து இரு தடவைகள் டெஸ்ட் போட்டியில் தோற்றதற்கு ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

'யுவராஜ் சிங், ஷேவாக், கோலி, தோனி ஆகியோரை விட கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினின் சராசரி ஓட்டம் அதிகமாக இருக்கிறது' எனும் டுவிட்டர் காமெண்ட் பிரபலயமாகியுள்ளது. அதைவிட தோற்றதற்கு தோனி என்ன காரணம் சொல்வார் என கேலி செய்யும் டுவீட் ஒன்றும் சென்னை வட்டாரத்தில் பிரபலமாகியிருந்தது.

அநியாயமாக இந்திய அணியின் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கொண்டாட்டத்தை பாழ்படுத்திவிட்டார். நேற்றே முடிந்திருக்க வேண்டிய போட்டியை இன்றுவரை இழுத்தடித்துவிட்டார். இதனால் தோனியால் அடுத்த போட்டியிலிருந்து அஷ்வின் நீக்கப்படவுள்ளார்' என்கிறது ஒரு டுவிட்.

இதேவேளை அடுத்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் வரிசையில், சகீர் கான், ஹ்யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் டிச.13ம் திகதி அடுத்த போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com