Thursday, December 6, 2012

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பெஜ்லியம் அணியை 1-0 என வீழ்த்தியதன் மூலம் இவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளது.மெல்போர்னில் நடைபெற்று வரும் 34 வது ஆண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்பின் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது இந்தியா.

லீக் போட்டிகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய போதும் நடப்பு சாம்பியனான ஜேர்மனியிடம் தோல்விகண்டது. இந்நிலையிலேயே இன்றைய காலிறுதி போட்டியில் இந்தியா மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது.மறுமுனையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் காலிறுதியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் அரையிறுதியில் இந்தியா மோதவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com