மகேஸ்வரின் சகோதரன் மீது அசிட் வீச்சு, காணிப் பிரச்சினை காரணமாம்.
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஜ.தே.க அமைச்சர் அமரர் மகேஸ்வரின் சகோதரர் துவாரகேஸ்வரனின் மீது அசிட் வீசப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணிப் பிரச்சினை காரணமாகவே அசிட் ஊற்றப்பட்டதாக துவாரகேஸ்வரன், பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் பகுதியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பயணித்த ஜீப் வண்டியின் கதவைத் திறக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதுகில் அசிட் ஊற்றி விட்டு தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தன் மீது அசிட் ஊற்றியவரை தனக்கு தெரியுமென்றும் அவர் தனது முறைப்பாட்டில் துவாரகேஸ்வரன் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment