விடுமுறை காலத்தில் சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ள சிறப்பு புகையிரதங்கள்!!
இன்று தொடக்கம் கண்டி முதல் திருகோணமலை வரை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும். கொழும்பு கோட்டையில் காலை 08.05 க்கு ஆரம்பமாகும் புகையிரதம், பிற்பகல் 03.30 க்கு திருகோணமலையை சென்றடையும். திருகோணமலையிலிருந்து காலை 09.30 க்கு புறப்படும் புகையிரதம் மாலை 04.40 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையுமென, புகையிரத திட்டமிடல் அத்தியட்சகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இம்மாதம் 10 ஆம் திகதி தொடகக்ம் கண்டி புகையிரத நிலையத்திலிருந்து பொல்கஹவலை வரை, மேலும் ஒரு புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படும். இச்சேவை காலை 10.45 க்கு ரம்புக்கனையிலிருந்து கண்டி வரை இடம்பெறுமென, புகையிரத திட்டமிடல் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குளிரூட்டப்பட்ட புகையிரதங்களும், பாடசாலை விடுமுறை நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை, விசேட அம்சமாகும்.
0 comments :
Post a Comment