இஸ்ரேல் மற்றும் நோபாளத்திற்கு புதிய தூதுவர்களை நியமித்தது அரசாங்கம்
இஸ்ரேல் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான நியமன கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.இதற்கமைய, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவராக சரத் விஜேசிங்கவும், நேபாளத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக டப்ளியூ. என். செனவிரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளார்
இஸ்ரேலிய தூதுவராலயத்தை கொழும்பில் திறப்பதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுக்கான புதிய தூதுவரை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment