“இலங்கை ராணுவத்துக்கு வெவ்வேறு மாநிலங்களில் பயிற்சி கொடுக்கிறோம்” -ஏ.கே.அன்டனி
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் குறுகிய மற்றும் நீண்டகால பயற்சிகளை வழங்கி வருவவதை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பயிற்சிகள் ராணுவ தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும், மற்றும் ராணுவ தொழில்நுட்பம் சாராத துறைகளில் நடைபெறுவதாக அவர் லோக் சபாவில் கூறியுள்ளார்.
லோக் சபாவில் பி.லிங்கம், பரபோத் பந்தி ஆகிய உறுப்பினர்கள் “இலங்கை ராணுவத்தினருக்கு இன்னும் இந்தியா பயிற்சி வழங்கி வருகிறதா?” என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளும் ராணுவ பயிற்சியை தமக்கிடையே மாறிமாறி வழங்கும் திட்டத்தின்படி இலங்கை மட்டுமின்றி, வேறு சில நாடுகளுடனும் ராணுவ பயிற்சி பரிமாறப்படுவதாக அவர் தமது பதிலில் கூறியுள்ளார். “இந்தப் பயிற்சியின் தேவைக்கேற்ப, பாதுகாப்பு, பயிற்சி கல்லூரிகள் அமைந்துள்ள வெவ்வேறு மாநிலங்களில் பயிற்சிகள் நடைபெறுகின்றன” என்றார், மத்திய பாதுகாப்பு அமைச்சர்.
“இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதில் ஏதாவது பிரச்னை உண்டா?” என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் அளிக்காமல், பாதுகாப்பு அமைச்சர் அளித்த பதில், “தேசிய நலனில் சகல அம்சங்களையும் கருத்திற்கொண்டு இந்தியா செயல்படுகிறது” என்பதுதான்.
0 comments :
Post a Comment