யாழில் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு.
பங்கரவாதத் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 25 பேர் கைது செய்யப்பட்ட முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்..
பயங்கரவாதத் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இதுவரையில் 45 இற்கும் மேற்பட்டோர் யாழ்.மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்கள் அனைவரும் விசாரணைகளுக்காக கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இதுவரையில் இக்கைதுகள் தொடர்பில் உறவினர்களால் 25 முறைப்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் இணைப்பாளர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment