Thursday, December 13, 2012

கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பில் 29 நாடுகளை உள்ளடக்கிய கருத்தரங்கு காலியில்..

'எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான மூலோபாய கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை' என்ற தொனிப்பொருளில் இரண்டு நாடள் கருத்தரங்கொன்று இன்று 13ம் திகதி காலியிலில் ஆரம்பமனாது. இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 29 நாடுகளின் கடற்படை பிரதான அதிகாரிகள் பங்குபற்றுகின்றனர்.

கருத்தரங்கில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜிஎல் பிரிஸ் பிரத அதிதியாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டுள்ளதுடன் அவுஸ்திரேலிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் றே கிறிக்ஸ் சிறப்புரை ஆற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்தரங்கில் சிறப்புரையாற்றும் அவுஸ்திரேலியக் கடற்படைத் தளபதியும், நாளை கொழும்பு வரவுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும், படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com