ஜெனிவா- அமெரிக்க யோசனைகளை இலங்கை நிராகரித்தது
ஜெனிவாவில், நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவையில், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட 210 யோசனைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மனித ஆணைக்குழு சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளில் 110 இனை இலங்கை ஏற்றுக்கொள்வதாக, தெரிவித்துள்ளார். நிராகரித்த பரிந்துரைகளை, அமைச்சர் தனித்தனியாக மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு பதிலளிக்கும்போது, இலங்கை தொடர்பில் கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க தயாரென, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறிருப்பினும், இலங்கைக்கு பொருத்தமான தீர்மானங்களை, இலங்கை அரசே அமுல்ப்படுத்தப்படுமென்றும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment