Monday, November 5, 2012

வடபகுதி மின்சார அபிவிருத்திக்கு அரசினால் 1800 கோடி ரூபா செலவு-அமைச்சர் சம்பிக்க

வடபகுதிக்கான மின்சார அபிவிருத்திக்கு 1800 கோடி ரூபாவினை அரசாங்கம் செலவு செய்து வருவதாக மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட மின்சக்தி மற்றும் மின்சக்திவள பாவனை தொடர்பில், யாழ். வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினருக்கும் மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஞானம்ஸ் விடுதியில் இன்று நடைபெற்றது.

அதன் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு கேட்கப்பட்ட கேள்வியென்றிற்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தாh. அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த 30 வருடகால நிலவிய யுத்த முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 1800 கோடி ரூபா செலவிடப்பட்டு வருகின்றது.

அதன்படி லக்சபான மின்சாரத்தினை வடபகுதி பூராகவும் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக லக்சபான மின்சாரத்தினை வழங்குவதற்காக இரு வழிப்பாதைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது லக்சபான மின்சாரம் கிளிநொச்சியில் வரைக்கும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. அதனைப் போல இந்த வருட இறுதிக்குள் சுன்னாகத்திலும் பெரிய மின்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு அதனூடாக யாழ். குடாவிற்குத் தேவையான மின்சாரம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி 2013ஆம் ஆண்டு மின்சார சபையினுடைய அபிவிருத்திப் பணிகள் 100 வீதம் பூர்த்தியாக்கப்படும் எனவும் யாழப்பாணத்திற்கு தேவையான முழமையான மின்சாரத்தை மின்சார சபை முழiயாக வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  November 6, 2012 at 6:58 PM  

After the colonial period northern province is lucky to have all these facilties,compliments and concessions
in this present government.Fed party and now TULF they just dramatize the poor inncent people.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com