Saturday, November 24, 2012

பிரதம நீதியரசர் விவகாரம் நீதிமன்றம் தலையிட வேண்டாம் -அரசாங்கம்

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை அரசியலமைப்புக்கு அமையவே சமர்பிக்கப்பட்டுள்ளது எனவே இவ்விடயத்தில் நீதிமன்றத்தை தலையிட வேண்டாம் என அரசாங்கம் இன்று கேட்டுக்கொண்டுள்ளது.நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அரசின் சார்பில் அமைச்சர்கள் இவ்வேண்டுகோளை விடுத்தனர்.

இங்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிக்கையில்,

பிரதம நீதியரசர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது நீதிதுறைக்கும் சட்டத்துறைக்கும் இடையிலான மோதல் என்ற தோற்றப்பாட்டையே கொடுக்கும்.

அரசியலமைப்புக்கு அமையவே இந்த குற்றப்பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழு முன் பிரதம நீதியரசர் அழைக்கப்பட்டமை ஒரு ஜனநாயக நடவடிக்கை' என்றார்

தொடர்ந்து அமைச்சர் ஜோன் செனவிரத்ன மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 107ஆம் உறுப்புரைக்கு அமையவே இந்த குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

எமது நடவடிக்கை சட்டவலு உடையது எனவும் அது சட்டத்தை மீறியது அல்ல. இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தின் செயன்முறையில் தலையிட வேண்டாமென நாம் நீதித்துறையிடம் உரிய மரியாதையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், உற்பத்திறன் மேம்பாட்டு அமைச்சர் லக்ஷமன் செனவரத்ன, விளையாட்டு துறை அமைச்சர், தெங்கு அபிவிருத்தி அமைச்சர், பிரதி கல்வி அமைச்சர், அருந்திக பெர்னாண்டோ எம்.பி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com