Saturday, November 24, 2012

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு 100 வாகனங்கள் விபத்து 2 பேர் பலி மேலும் பலர் காயம்

.

அமெரிக்காவின் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் இன்று காலை காணப்பட்ட கடும் பனிமூட்டதால் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 80 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொலிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொலிவின் தொடர்ச்சியாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

இதனால் வானகங்கள் ஒன்றின் மீது ஒன்று குவியலாக மோதி நிற்கின்றன விபத்துக்குளான வாகனங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விபத்தில் காயமடைந்தவர்களில் சுமார் 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com