இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Friday, November 2, 2012

டீவி நிகழ்ச்சியை பார்த்து தந்தையை சுட்டுக் கொன்ற மகன்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்ஹால். வீட்டில் ஷோபாவில் படுத்து தூங்கிய இவரை அவரது 12 வயது மகன் துப்பக்கியால் சுட்டுக்கொன்றான். எனவே, அவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.இவன் தனது தந்தை மற்றும் சித்தியுடன் (மாற்றாந்தாய்) தங்கியிருந்தான். சித்தியையும், அவனையும் தந்தை ஜெய்ஹால் அடித்து உதைத்து கொடூரமாக நடத்தி வந்தார். இருந்தும் அவனது சித்தி பொறுமையுடன் வாழ்ந்து வந்தார்.

ஆனால், அவரை விவாகரத்து செய்ய ஜெய்ஹால் முடிவு செய்தார். இதை பொறுக்க முடியாத சிறுவன் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றான்.

இந்த சம்பவத்தை நிகழ்த்த டி.வி. நிகழ்ச்சி தனது தூண்டுகோலாக இருந்ததாக அவன் பொலிலீசாரிடம் தெரிவித்தான். டி.வி. நிகழ்ச்சியில் கொடூர தந்தையை மகன் கொலை செய்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

அதைப்பார்த்து தானும் அவரை கொன்றதாக போலீசாரிடம் அளித்த வாங்குமூலத்தில் அவன் கூறினான்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் தனது 23 வயது வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com