தாய்சேய் மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரை விசாரிக்க நீதிமன்றம் கட்டளை
தனியார் வைத்தியசாலையென்றில் தாயும் இரண்டு பிள்ளைகளும் பிரசவத்தின் போது மரணமான சம்பவம் தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை விசாரணை செய்ய யாழ்.நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரண்டு பிள்ளைகளும் தாயும் பிரசவத்தின் போது மாரணமானார்கள்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்தன. இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று நடைபெற்றன.
இதன்போது பொலிஸாரின் கோரிக்கைக்கு ஏற்பவே நீதிமன்ற இந்த கட்டளையைப் பிறப்பித்துள்ளது.
மேலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை எதிர்வரும் 19ம் திகதி நவம்பர் மாதம் நேரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment