இலங்கையில் இவ்வருடம் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான பெற்றோல் கையிருப்பிலுள்ளதாக பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதோடு இலங்கைக்கு தேவையான மசகு எண்ணெயை சவூதி அரேபியா வியட்நாம் மற்றும் ஓமான் ஆகிய நாடு களிடமிருந்து தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளும் வகையில் அந்நாடுகளுடன் வெகுவிரைவில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து நாடுகளினதும் மசகு எண் ணெய் வகைகள் இலங்கையில் பாவனைக்கு பொருந்தாது என்பதனால் நம் நாட்டுக்குப் பொருத்தமானவற்றை மாத்திரம் பெற்றுக்கொள்வதிலேயே அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.
அத்துடன் செலவீனங்களைக் குறைத்துக் கொள்ளும் வகையில் எதிர்காலத்தில் சிங்கப்பூரிலுள்ள மசகு எண்ணெய் சந்தையிலிருந்து நேரடியாக அவற்றைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
டுபாய் நாட்டிலிருந்து ஏற்கனவே இரண்டு கப்பல்களில் இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட மசகு எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரமளவில் சவூதி அரேபியாவிலிருந்து மேலுமொரு கப்பல் இலங்கை வரவுள்ளது.
எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வருட இறுதி வரை நாடளாவிய ரீதியில் சீரான பெற்றோல் விநியோகம் நடைபெறமெனவும் அந்த அதிகாரி உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment