Wednesday, November 7, 2012

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல.அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடுமருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள்இருக்கின்றன.

மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால் விரல்களை தெரியாமல் வெட்டிக் கொள்வோம். இத்தகைய நேரங்களில் எல்லாம், என்ன செய்வது என்று பதட்டப்படாமல், பாட்டி வைத்தியமான வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்.

* அடிப்பட்டு இரத்தம் வரும் போது, உடனே அந்த இடத்தை கழுவி விட்டு, வீட்டில் இருக்கும் காப்பி பொடியை, அந்த காயத்தின் மேல் வைக்க வேண்டும். இதனால் காப்பி பொடி இரத்தத்தை உறைய செய்யும்.

* இரத்த வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவை வைத்தால், அடிப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வடிதல் நின்றுவிடும். இது ஒரு சிறந்த ஹோம் ட்ரீட்மெண்ட்.

* இந்த முறை சற்று வித்தியாசமானது. ஆனால் உண்மையானது. எலக்ட்ரிக்கல் டேப் வைத்து இரத்த வடிதலை தடுக்கலாம். எப்படியெனில், எலக்ட்ரிக்கல் டேப்பை காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இறுக்கமாக சிறிது நேரம் கட்ட வேண்டும். இதனால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடும்.

* சிறுவயதாக இருக்கும் போது, ஏதேனும் அடிப்பட்டால், வீட்டில் இருக்கும் அம்மா உப்பை அந்த இடத்தில் வைப்பார்கள். ஏனெனில் உப்பு மற்றும் உப்பு நீர், காயங்களை மட்டும் சரிசெய்யாமல், இரத்த வடிதலையும் தடுக்கும்.

* காயத்தால் இரத்தம் வரும் போது, சிலந்தி வலைகளை, அதன் மேல் வைத்தால், சிறிது நேரத்தில் இரத்தக் கசிவு நின்றுவிடும். பின் அதனை சுத்தமாக கழுவிட வேண்டும். இந்த சிகிச்சையை நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் சரியாகிவிடும்.

ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், இரத்தக் கசிவு நீங்கிவிடும். மேலும், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com