Wednesday, November 7, 2012

விண்ணில் இருந்து இ-மெயில் மூலம் ஓட்டு போட்ட சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (47). தற்போது இவர் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். தற்போது, அவர் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் பொறுப்பாளராகவும் இருக்கிறார்.இந்த நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. அதில், விண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் ஓட்டு போட்டார்.

கடந்த 1997-ம் ஆண்டு சட்டதிருத்தத்தின்படி டெக்கான் மாகாணத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தின் இருந்தே இ-மெயில் மூலம் ஹுஸ்டனில் உள்ள நாசா விண்வெளி மையத்துக்கு தங்களின் ஓட்டுகளை பதிவு செய்யமுடியும்.

அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தேபடியே ஓட்டு போட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com