நீலம் புயல் அச்சுறுத்தல் எதிரொலி: ஆந்திராவில் கடலோர மாவட்டங்கள் உஷார்
நீலம் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், அது குறித்து ஆந்திர வருவாய்த்துறை மந்திரி என்.ரகுவீர ரெட்டி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புயலின் பாதிப்பு தமிழ்நாட்டில் தான் அதிகம் இருக்கும். இருப்பினும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான நெல்லூர், பிரகாசம், சித்தூர், குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாவட்ட கலெக்டர்களை அறிவுறுத்தி உள்ளோம்.
மேலும், தலைமை செயலகத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்கு ஒரு தடவை, உயர் அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்வார்கள். அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்
0 comments :
Post a Comment