ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதவிகளுக்காக குரானை மறந்துவிட்டது - ரணில்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வெறும் வரப்பிரசாதங்க ளுக்காக அரசாங்கத்துடன் இணைந்து, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் காட்டிக் கொடுத்துள்ளது என்றும், கட்சியின் கொள்கை வழிகாட்டியான குர்ஆனையும், ஹதீஸையும், புறம் தள்ளி விட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று மஹிந்த சிந்தனையையே பின்பற்றி வருகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று மாகாணங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடன் ஸ்ரீகோத்தாவில் வைத்து உரையாறிய போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றி தேர்தலின் பின்னர் அரசுடன் இணைந்து பாரிய இனக்காட்டிக் கொடுப்பை செய்துள்ளது. தேர்தலுக்கு முன்னர் தீர்மானித்த விடயத்தினையே முஸ்லிம் காங்கிரஸும் அரசுடன் இணைந்து நிறைவேற்றிக் கொண்டுள்ளன. இடையில் ஏற்பட்ட அனைத்து சம்பவங்களுமே நடிப்புகளாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகளை அதிகரித்துக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி எனவே அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment